Sunday, February 15, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொண்டையில் நாணயம் சிக்கி 2 மாத சிசு பலி

தொண்டையில் நாணயம் சிக்கி 2 மாத சிசு பலி

தொம்பே – அஹுகம்மன பிரதேசத்தில் இரண்டு மாத பெண் குழந்தையின் தொண்டையில் நாணயம் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அஹுகம்மன பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

​​சிசுவின் சகோதரன் (2) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, குழந்தையின் வாயில் நாணயத்தை திணித்துள்ளதாக தொம்பே பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொண்டையில் நாணயம் சிக்கியிருந்த சிசுவை தொம்பே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் சிசு இறந்துவிட்டதாக தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.

இருப்பினும் சிசுவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ரமேஷ் அழகியவண்ண மேற்கொண்டார்.

குறிப்பாக மூச்சுக்குழாய் அடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக தடயவியல் நிபுணர் மருத்துவ அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் உயிரிழந்த சிசுவின் தாயும் மற்றைய குழந்தையும் தனது திருமணமான கணவரை விட்டு பிரிந்து வாழ்வதாகவும் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles