Monday, November 18, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீரற்ற காலநிலை நீடிக்கும் சாத்தியம்

சீரற்ற காலநிலை நீடிக்கும் சாத்தியம்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேல் சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஆங்காங்கே 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மேல் மாகாணத்திலும் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles