Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகார் விபத்தில் ஒருவர் படுகாயம்

கார் விபத்தில் ஒருவர் படுகாயம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் வெண்டிக்கோணர் பகுதியில் இன்று (04) இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியா வைத்தியசாலைக்கு சென்ற வைத்தியர் ஒருவரின் காரே சீரற்ற காலநிலையால் பனிமூட்டம் நிறைந்து காணப்பட்டமையால் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் பயணித்த 25 வயதுடைய பெண்ணின் மீது மோதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வீதியில் சென்ற பெண் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நானுஓயா பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles