Saturday, June 13, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகல்விக்கடன் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கல்விக்கடன் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தனியார் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை கற்பதற்கான வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக இந்தக் கடன் திட்டத்தின் கீழ் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது, தொழிற்கல்வி பாடநெறிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், இதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles