Saturday, November 16, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் டொலர் உதவி

உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் டொலர் உதவி

உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை வரவு செலவுத் திட்ட உதவியாக இலங்கை பெற்றுள்ளது.

உலக வங்கியினால் உறுதியளிக்கப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதியை வழங்குவது இதுவே முதல் முறை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இது நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு முக்கியமான வரவு செலவுத் திட்டம் மற்றும் நலன்புரி ஆதரவை வழங்கும் என நம்பப்படுகிறது.

உலக வங்கியின் பணிப்பாளர் சபை கடந்த வாரம் இலங்கைக்கு அடிப்படையான சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு இரண்டு செயற்பாடுகளுக்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை அங்கீகரித்துள்ளது.

இந்த நிதியானது பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும், ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான தற்போதைய மற்றும் எதிர்கால அதிர்ச்சிகளின் தாக்கத்தை குறைக்கவும், உள்ளடக்கிய மற்றும் தனியார் துறை தலைமையிலான மீட்பு மற்றும் வளர்ச்சி பாதையை ஆதரிக்கவும் உதவும் என்று உலக வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles