Tuesday, July 29, 2025
26.7 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்காவில் நடைபெற்ற பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சி

அமெரிக்காவில் நடைபெற்ற பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆலன் கிழக்கு மையத்தில் பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சியில் 4 முதல் 84 வயதுக்கு உட்பட்ட 10,000 பேர் வரை கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை யோகா சங்கீதா மற்றும் எஸ்.ஜி.எஸ். கீதா பவுண்டேசன் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

குரு பூர்ணிமாவை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சி, உலக புகழ் பெற்ற ஆன்மீக சுவாமிகளான பூஜ்ய கணபதி சச்சிதானந்த ஜி முன்னிலையில் நடந்தது

இதனை மைசூர் நகரில் உள்ள அவதூத தத்தா பீடம் ஆசிரமம் தெரிவித்துள்ளது.

சுவாமியின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

அமெரிக்காவில் இந்து ஆன்மீக தன்மையை பரப்பும் நோக்கில் கடந்த சில நாட்களாக சுவாமிஜி இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles