Thursday, March 26, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசெல்ஃபி எடுக்க சென்ற யுவதிக்கு நேர்ந்த சோகம்

செல்ஃபி எடுக்க சென்ற யுவதிக்கு நேர்ந்த சோகம்

அத்தனகலு ஓயா துனமலை நீர்நிலைக்கு அருகில் செல்ஃபி புகைப்படம் எடுக்கச் சென்ற யுவதி ஒருவர் வழுக்கி ஓயாவில் விழுந்து காணாமல் போயுள்ளார்.

கெசெல்வத்தை – குணசிங்கபுர பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய யுவதியே நேற்று (02) பிற்பகல் காணாமல் போயுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன யுவதியின் நண்பர்கள் இருவர் திஹாரிய பிரதேசத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளதுடன் அவர்களுடன் இந்த யுவதியும் அங்கு சென்றுள்ளார்.

அங்கு மூவரும் அத்தனகலு ஓயாவை அண்மித்த நிலையில், செல்ஃபி எடுக்கச் சென்ற போது யுவதி அத்தனகலு ஓயாவில் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன யுவதியை தேடும் நடவடிக்கைகளை கடற்படை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles