Saturday, January 24, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வரும் நாசா விஞ்ஞானிகள்

இலங்கை வரும் நாசா விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளுக்கும், இலங்கையில் காணப்படும் கற்பாறைகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு நாசாவிலிருந்து வந்த விஞ்ஞானிகள் குழுவினர் முதலில் இலங்கையின் கினிகல்பலஸ்ஸ பிரதேசத்தில் கண்காணிப்புச் சுற்றுலாவில் இணைந்து பின்னர் இந்திகொலபலஸ்ஸ மற்றும் உஸ்ஸங்கொட பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர்.

இது தொடர்பில் களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் வணக்கத்திற்குரிய கபுகொல்ல ஆனந்தகித்தி தேரர் கருத்து தெரிவிக்கையில்,

‘இலங்கையின் புவியியல் அம்சங்கள், செவ்வாய் கிரகத்தில் உள்ள சில பாறைகள் மற்றும் மண்ணுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.’

இது தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு, சிங்களத்தில் இந்த இரண்டு வகையான பாறைகளுக்கும் சரியான பெயர்கள் சூட்டப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles