மெக்சிகோவில் கடும் வெப்பம் காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகளவானோர் கடும் வெப்ப தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு சில மரணங்கள் நீரிழப்பு காரணமாகவும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சில நகரங்களில் வெப்பநிலை இன்னும் அதிகமாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.