Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுத்தூர் சம்பவம்: 31 பேர் கைது

புத்தூர் சம்பவம்: 31 பேர் கைது

யாழ்ப்பாணம், புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் 25 பெண்கள் உட்பட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வன்முறையில் ஈடுபட்ட பலரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணம் – புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் இருவரையும் தாக்கியதுடன் பெறுமதியான பொருட்களுக்கும் சேதம் விளைவித்தனர்.

இதனால் குறித்த இளைஞர்களின் வீடுகள் சேதமடைந்ததுடன் இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles