பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற போராட்டத்துடன் தொடர்புடைய 667 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களில், 14 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களே அதிகளவில் உள்ளதாக அந்த நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பரிஸில் 17 வயது சிறுவன் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பொது மக்களினால் கடந்த மூன்று நாட்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பகுதியில் போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.