சீன மிருகக்காட்சிசாலைக்கு குரங்குகளை வழங்கினால் அவை மனிதர்களின் அன்பு, ஆதரவுடன் வாழும் எனவும், வனவிலங்குகளால் பயிர்கள் அழிவடைவதை தடுப்பது குறித்து எம்மிடம் கேட்கவேண்டாம் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து கொழும்பில் டொலர்களை நம்பி ஏசி அறைகளில் சுகபோக வாழ்க்கை நடத்துவோருக்கு புரியப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் வேலைத்திட்டம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
