Wednesday, January 21, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு‘சக் சுரின்’ யானை தொடர்பில் தாய்லாந்து கடுமையான விமர்சனம்

‘சக் சுரின்’ யானை தொடர்பில் தாய்லாந்து கடுமையான விமர்சனம்

இலங்கையில் நோய்வாய்ப்பட்டுள்ள, தாய்லாந்து யானையான சக் சுரின், தொடர்பில் தாய்லாந்தின் செய்தித்தளம் ஒன்றில் கடும் விமர்சன கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.

இலங்கையின் பல நகரங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் எசல பெரஹெராவில் இந்த யானை முக்கிய பங்கு வகித்துள்ளது.

இலங்கைக்கான தாய்லாந்தின் முன்னாள் தூதுவர் போல்டேஜ் வோராசாடடின் கருத்துப்படி,
”அதன் அழகான நீண்ட தந்தங்கள் மற்றும் குணாதிசயங்கள் காரணமாக சக் சூரின் ஒவ்வொரு ஆண்டும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் 30க்கும் மேற்பட்ட எசல பெரஹெர ஊர்வலங்களில் முக்கிய யானையாக பங்கேற்றுள்ளது.

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு நல்லெண்ண தூதர்களாக சக் சுரின் உட்பட மூன்று யானைகள் அனுப்பப்பட்டன.

முதலில் 1979 இல் ஒரு யானையும் பின்னர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சக் சுரின் மற்றும் ஸ்ரீ நரோங். ஆகியனவும் இலங்கைக்கு அனுப்பப்பட்டன

இந்தநிலையில் குறித்த பெரஹர இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2 மணிக்கு முடிவடையும், இது ஏழு நாட்கள் நீடிக்கும், சுமார் 150 யானைகள் பங்கேற்கின்றன. இதன்போது, யானைகள் இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். அத்துடன் ஏராளமான அலங்காரப் பொருட்களை முதுகில் சுமக்க வேண்டும்.

எனவே பாதுகாவலர்கள் இந்த நடைமுறையை கொடூரம் என்று அழைக்கிறார்கள்.

இலங்கையில் உள்ள யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், அவற்றை தாய்லாந்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை” என்றும் தாய்லாந்தின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் நோய்வாய்ப்பட்டுள்ள சக் சுரின் யானையை நாளைமறுதினம் தாய்லாந்திற்கு விமானம் மூலம் அனுப்பபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles