டெங்கு பரவும் அபாயம் அதிகம் உள்ள இடமாக அரசு நிறுவனங்களின் வளாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், ஒவ்வொரு அரசு நிறுவனங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை நியமிக்குமாறு பணிப்புரை விடுக்கப்டப்டுள்ளது.
குழுவின் செயல்பாடுகள் தொடர்பான அறிக்கையை ஒவ்வொரு அரசு நிறுவனமும் வட்டார சுகாதார மருத்துவ அதிகாரிக்கு மாதந்தோறும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
