வங்கிகள் மற்றும் பங்கு சந்தை ஆகியவை இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை ஆரம்பமாகின்றது.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு வங்கிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், நாளை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து வார இறுதி விடுமுறைகள் காணப்படுவதுடன், திங்கட்கிழமை பூரணை விடுமுறை வழங்கப்படுகின்றது.
உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் நோக்கில் தொடர் விடுமுறை அவசியம் என கருதப்பட்ட நிலையில், நாளை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டு தொடர் வங்கி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலப் பகுதியில் வங்கிகள் மற்றும் பங்கு சந்தை ஆகியன மூடப்படுவதுடன், ATM மற்றும் இணைய வழி வங்கி சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.