வெல்லவாய பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரன்தெனிய வனப்பகுதியில் நேற்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த வனப்பகுதியில் இன்று காலை வரை தீ வேகமாகப் பரவியதால் ஐந்து ஏக்கருக்கும் அதிகமான நிலம் தீக்கிரையானது.
தற்போது தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தீயினால் வனப்பகுதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.