Monday, January 19, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ்ப்பாணம் சென்றார் மைத்ரி

யாழ்ப்பாணம் சென்றார் மைத்ரி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன நேற்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வழிபாட்டிற்கு பின்னர் ஆலயசூழலில் நின்ற முன்பள்ளி குழந்தைகள், வெளிநாட்டவர்களுடன் அவர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள மைத்ரிபால சிறிசேன, அடுத்த 2 நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும், சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles