Friday, January 17, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம்

நாட்டில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம்

2016ஆம் ஆண்டு மலேரியாவை ஒழித்த நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கையில் மீண்டும் மலேரியா பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட 20 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளளனர்..

எஞ்சிய 17 பேர் இலங்கையர்கள் எனவும், அவர்கள் ருவாண்டா, தெற்கு சூடான், உகண்டா, தான்சானியா, சியரா லியோன் மற்றும் கினியா ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மலேரியா தொடர்பான சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் 071 – 284 1767 மற்றும் 0117 626626 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்குத் தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles