Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுப்பை மேட்டிலிருந்து துப்பாக்கி - தோட்டாக்கள் மீட்பு

குப்பை மேட்டிலிருந்து துப்பாக்கி – தோட்டாக்கள் மீட்பு

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் மொரட்டுவை லுனாவ பிரதேசத்தில் குப்பை மேட்டில் துப்பாக்கி மற்றும் 24 தோட்டாக்களை கண்டெடுத்துள்ளார்.

தனிப்பட்ட தகவலாளரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ஓய்வுபெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் துப்பாக்கியைக் கண்டுபிடித்ததாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மொரட்டுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1988ஆம் ஆண்டு பொலிஸ் களப் படைத் தலைமையகத்தினால் திருகோணமலைப் பிரிவினரிடம் இந்த துப்பாக்கி கையளிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles