அஸ்வெசும எனப்படும் ஆறுதல் நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் இதுவரை 383,232 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 5,045 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அஸ்வெசும அறுதல் நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்குஇ ஒரு வாரத்திற்குள் தீர்வை வழங்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த வாக்குறுதியினை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.