நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பொரளை சரணபால தேரர் மாவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 4 கிலோ 4 கிராம் ஐஸ் போதைப்பொருள், 195 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் முக்கிய சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.