Wednesday, November 20, 2024
25.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக அதிகரிக்க தீர்மானம்

வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக அதிகரிக்க தீர்மானம்

விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக உயர்த்துவதற்கு சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (27) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 17-ம் திகதி வைத்திய நிபுணர்கள் 60 வயதில் ஓய்வுபெறும் வகையில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி 176 வைத்திய நிபுணர்கள் தாக்கல் செய்த ரிட் மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளரிடமிருந்து தமக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திரு.சஞ்சீவ ஜயவர்தனஇ நீதிமன்றில் உண்மைகளை முன்வைக்கும் போது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். எனினும் சில விசேட வைத்தியர்கள் இம்மாதம் 30ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள நிலையில்இ இந்த மனுவை பரிசீலிக்க இன்று (28) கூடுமாறு கோரப்பட்டது.

இதன்படிஇ குறித்த மனுவை பரிசீலிக்க இன்றைய தினம் அழைக்குமாறு நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற மேன்முறையீட்டு பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles