தென் கொரியர்களின் வயது இன்று (28) முதல் ஓரிரு வருடங்கள் குறையும் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களிடையே வயதைக் கணக்கிடும் பாரம்பரிய முறையைக் கைவிட்டு, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைப்படி வயதைக் கணக்கிடுவதால் இவ்வாறு வயது குறையவுள்ளது.
தென் கொரிய பாரம்பரியத்தின் படிஇ அவர்களின் வயது கருத்தரித்த திகதி அல்லது ஜனவரி முதலாம் திகதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.
அந்த அமைப்பின் ஊடாக சர்வதேச விவகாரங்களில் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதன் காரணமாகவே இந்தப் புதிய முறையை கையாள அவர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.