2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை லங்கா சதொச நிறுவனத்திற்கு 1500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் (ஊழுP) தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டம் மாத்திரம் 60 கோடி ரூபா என கோப் குழு தெரிவித்ததுடன், சதொச நிறுவனத்திற்கு அரிசியை இறக்குமதி செய்த போது 600 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டமை தொடர்பில் கோப் குழு நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளது.
மனித பாவனைக்காக கொண்டு வரப்பட்டு கால்நடை தீவனத்திற்காக விற்பனை செய்யப்பட்ட அரிசியின் கையிருப்பு காலாவதியானதால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எதிர்காலத்தில் மேலும் கலந்துரையாட கோப் குழு தீர்மானித்துள்ளது.