Friday, February 13, 2026
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎப்போதும் யாசக தேசமாக இருக்க முடியாது - ஜனாதிபதி

எப்போதும் யாசக தேசமாக இருக்க முடியாது – ஜனாதிபதி

நாம் எப்பொழுதும் யாசகர்களின் தேசமாக இருக்க முடியாது எனவும், உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதி உட்பட எந்தவொரு பொது நிதியும் பாதிக்கப்படாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கம்பஹா மாவட்ட செயலாளரின் நிர்வாக வளாகமான ‘லக்சியன மந்திரய’வை நேற்று (27) மக்களிடம் கையளிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நாட்டின் வங்கி அமைப்பு அல்லது எந்தவொரு பொது அல்லது தனியார் வங்கியின் ஸ்திரத்தன்மையை பாதிக்காது.

நாட்டிலுள்ள 50 மில்லியனுக்கும் அதிகமான வங்கி வைப்பாளர்களின் வைப்புத்தொகை மற்றும் வைப்புத்தொகைக்கு செலுத்தப்படும் எந்தவொரு வட்டியும் பாதிக்கப்படாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles