Friday, August 1, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹங்குராங்கெத்த கொலை சம்பவம்: 8 பேர் கைது

ஹங்குராங்கெத்த கொலை சம்பவம்: 8 பேர் கைது

நுவரெலியா, ஹங்குராங்கெத்த பகுதியில் இளைஞரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த 08 சந்தேக நபர்களை பொலிஸார் இன்று (ஜூன் 27) கைது செய்துள்ளனர்.

19 மற்றும் 63 வயதுடைய சந்தேக நபர்கள் கண்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 48 வயதுடைய பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

மேற்கண்ட படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி நேற்றிரவு ஹங்குராங்கெத்த பொலிஸாருடன், பொது மக்கள் முறுகல் நிலையில் ஈடுட்டனர்.

சந்தேக நபர்களை கைது செய்யாததால் 200 க்கும் மேற்பட்டோர் ஹங்குராங்கெத்த பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து அடாவடியில் ஈடுபட்டதுடன், அவர்களை கலைக்க பொலிஸார் வான் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles