நாட்டில் தற்போது விமானங்கள் ரத்து செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தற்போதுள்ள விமானிகளின் எண்ணிக்கையை கொண்டு, தமது சேவைகளை வினைத்திறனாக முன்னெடுக்க முடியுமென தெரிவித்துள்ளது.
அதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானங்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களில் 18 இலிருந்து 15 ஆக குறைந்துள்ளன.
குத்தகை காலாவதியாவதால் விமான பற்றாக்குறை ஏற்படுமென ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் கணித்திருந்தது.
எனினும், எதிர்பாராத நிகழ்வுகளால் எதிர்பார்த்ததை காட்டிலும் நிலைமை மோசமடைந்தது.
உள்நாட்டில் உதிரிபாகங்கள் கிடைக்காமை காரணமாக இரண்டு விமானங்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டன.
அத்துடன், பொருளாதார நெருக்கடி காரணமாக புதிய குத்தகைகளுக்கான கொள்முதல் செயல்முறையும் தாமதமானது.
எனினும், எதிர்வரும் ஜூலை மாத நடுப்பகுதியில் இந்த நிலைமை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.