கடலில் மீன் விளைச்சல் குறைந்ததே சந்தையில் மீன்களின் விலை உயர்வதற்கு முக்கிய காரணம் என நீர்கொழும்பு கடற்றொழிலாளர் அமைப்புகளின் கூட்டு உறுப்பினர் ஜூட் நாமல் தெரிவித்துள்ளார்.
சால மீன் (சர்டினெல்லா), சுதயா (வெள்ளை சார்டினெல்லா) மீன்கள் தவிர ஏனைய அனைத்து வகையான கடல் மீன்களின் விலையும் ஒரு கிலோ ரூ.2000-க்கும் அதிகமாக இருப்பதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
எரிபொருளின் விலை அதிகரிப்பு மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விலை அதிகரிப்பு என்பனவும் மீன் விலையில் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.