பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கரையான்களால் சேதமடைவதால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிதீவிர சிகிச்சைப் பிரிவு 50 வருடங்களுக்கு மேல் பழைமையான கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளதாகவும் அது தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஏற்ற நிலையில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் கரையான்களால் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்பிரச்னையால், சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலைமை குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
#Hiru News