உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டின் போது மக்களின் வங்கி வைப்புக்கள் மற்றும் வட்டி வீதங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார்.
அரசாங்கம் தனது உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தை இந்த வாரம் வெளியிட உள்ளது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாராளுமன்றத்தில் பரிசீலிக்கப்படும்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டின் போது, கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைத்தல், வட்டி குறைப்பு மற்றும் செலுத்தும் காலத்தை நீடித்தல் போன்ற நடவடிக்கைகள் கலந்துரையாடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
தனிநபர் வைப்புத்தொகை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களான EPF, ETF மற்றும் ஓய்வூதிய பலன்கள் தொடவோ அல்லது அதற்கு பாதிப்பு ஏற்படவோ மாட்டாது என்றும் அவர் கூறினார்.