Sunday, September 14, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடமேல் மாகாணத்தில் கால்நடைகளை கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

வடமேல் மாகாணத்தில் கால்நடைகளை கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

கால்நடைகளின் தோல் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக வடமேல் மாகாணத்தில் கால்நடைகளை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி முதல் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் பி.சி.எஸ் பெரேராவின் கையொப்பத்துடன் இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles