இம்மாதம் 30ஆம் திகதி வங்கிகளுக்கான விசேட முறை நாளாக அறிவிக்கப்பட்டதன் மூலம், வங்கிகளுக்கு 29ஆம் திகதி முதல் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நீண்ட விடுமுறையானது உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான கால அவகாசத்தை பெற்றுக் கொள்வதற்காகவே என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை அறிவித்துள்ளார்.
இந்த கடன் மறுசீரமைப்பின் ஊடாக உள்நாட்டு பண வைப்பாளர்களின் பணத்துக்கோ அதற்கான வட்டி தொகைக்கோ பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.