1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்ததற்கான காரணத்தைக் கண்டறிய அமெரிக்க கடலோரக் காவல்படை சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அதன் தலைமைப் புலனாய்வு அதிகாரி கேப்டன் ஜேசன் நியுபவர், இந்த விசாரணை எதிர்கால துயரங்களைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும் என்றார்.
இதற்காக கனடா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.