நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக ஜனாதிபதியின் டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை 47,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குழுவின் தலைவர் வைத்தியர் சீதா ஆரம்பேபொல தெரிவித்தார்.
மேலும், பதிவாகும் நோயாளர்களில் 75% பேர் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், டெங்கு காய்ச்சல் சிறு குழந்தைகளிடையே பொதுவாகக் காணப்பட்டாலும், தற்போது, இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.