Saturday, April 11, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுற்றவாளிகளுக்காக போலி கடவுச்சீட்டு தயாரித்த மூவர் கைது

குற்றவாளிகளுக்காக போலி கடவுச்சீட்டு தயாரித்த மூவர் கைது

பல்வேறு குற்றவாளிகளுக்கு நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தயாரித்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடவத்தை பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டதுடன், சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர்களுக்கு உதவிய மற்றுமொரு நபரும் ஹோமாகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 52, 54 மற்றும் 58 வயதுடைய கிரில்லவல, பிலியந்தலை மற்றும் பன்னிபிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேக நபர்கள் மூவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles