கடந்த வாரத்துடன் (23) ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 299.03 ரூபாவிலிருந்து 299.83 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
விற்பனை பெறுமதியும் 314.36 ரூபாவிலிருந்து 314.92 ரூபாவாக அதிகரித்துள்ளது.
எவ்வாறெனினும் ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் கனேடிய டொலர், ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக அது வீழ்ச்சியடைந்துள்ளது.