Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு மேலும் ஆதரவளிக்க தயார் - சீனா

இலங்கைக்கு மேலும் ஆதரவளிக்க தயார் – சீனா

இலங்கைக்கு மேலும் ஆதரவளிக்க சீனா தயாராக இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சர் குயின் கேங் தெரிவித்துள்ளார்.

நேற்று (25) சீனாவின் பெய்ஜிங்கில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு சீனா தொடர்ந்து ஆதரவளித்து மக்களின் வாழ்வாதாரத்தை தன்னால் இயன்றவரை மேம்படுத்தும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையும் சீனாவும் எப்பொழுதும் ஒருவரையொருவர் மதித்து ஆதரவளித்து, சகவாழ்வு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பிற்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்குவதாகவும், இலங்கையுடனான தனது பங்காளித்துவத்தை பலப்படுத்தவும் விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாகவும் சீன வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles