Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறக்குமதி செய்யப்படும் முட்டைகளை விற்பனை செய்ய தடை

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை விற்பனை செய்ய தடை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பிற கடைகளுக்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அந்த பேக்கரிகளுக்கு முட்டை வழங்குவது உடனடியாக நிறுத்தப்படும் என்றும் அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ நிறுவன தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

பேக்கரி உரிமையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஒரு தொகுதி முட்டையை அவரது சகோதரரின் கடையில் விற்பனைக்கு வழங்கியதன் காரணமாக அவருக்கு முட்டை வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூர் முட்டை விலையை குறைப்பதற்காகவும், முட்டை தட்டுப்பாட்டை சீர் செய்யவும் இவ்வாறு முட்டை இறக்குமதி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நாளாந்தம் பத்து இலட்சம் முட்டைகள் தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles