Monday, September 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇயங்காமல் உள்ள 24 நீதிமன்றங்கள்

இயங்காமல் உள்ள 24 நீதிமன்றங்கள்

நீதி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சிறிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான 25 நீதிமன்றங்களில் ஒன்று மாத்திரமே செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 25 நீதிமன்றங்களும் இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியில் இருந்து செயற்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் பௌதீக மற்றும் மனித வளங்களின் கடுமையான பற்றாக்குறையின் காரணமாக இந்த செயல்முறை தடைப்பட்டுள்ளது.

குறித்த நீதிமன்றங்கள் சிறிய அளவிலான பிணக்குகளை விசாரணை செய்து, அதிகபட்சமாக 18 மாதங்களுக்குள் தீர்ப்புகளை வழங்க வேண்டும்.

அத்துடன் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னரும், சர்ச்சைக்குரிய தரப்பினரை அழைத்து விசாரணையைத் தொடராமல் சமரசம் செய்ய இந்த நீதிமன்றங்கள் முயற்சி செய்யலாம். இதனடிப்படையில் ஏனைய நீதிமன்றங்களின் சுமை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, கடுவெல, கண்டி, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் மொத்தம் 25 சிறிய நீதிமன்றங்கள் முதலில் நிறுவப்படவிருந்தன. எனினும் இதுவரை கொழும்பில் மட்டுமே ஒரு நீதிமன்றம் இயங்கி வருகிறது.

கட்டிட வசதிகள், உபகரணங்கள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லாமையை இந்த நீதிமன்றங்கள் இயங்காமைக்கான முக்கிய காரணங்கள் என்று காரணம் கூறப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles