1980 முதல், ஐரோப்பா சராசரி விகிதத்தை விட இரண்டு மடங்கு வெப்பமடைந்து வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
உலக வானிலை ஆய்வு மையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-ம் ஆண்டு அதிக வெப்பநிலை பதிவான ஆண்டாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், போர்த்துக்கல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கடந்த ஆண்டை தமது அதிக வெப்பமான ஆண்டாக பதிவு செய்துள்ளன.