Sunday, April 12, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமினுவாங்கொடை சம்பவம் - பிரதான சந்தேகநபர் துப்பாக்கிச்சூட்டில் பலி

மினுவாங்கொடை சம்பவம் – பிரதான சந்தேகநபர் துப்பாக்கிச்சூட்டில் பலி

மினுவாங்கொடை பகுதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது, துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.

கடந்த 18ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைதுசெய்ய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இன்று அதிகாலை எம்பிலிப்பிட்டி பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, சந்தேகநபர், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில், 22 வயதான குறித்த சந்தேகநபர் பலியானதாக பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles