Wednesday, August 6, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிந்த அளவுக்கு நாட்டுக்கு சேவையாற்றிய தலைவர் எவருமில்லை - லொஹான் ரத்வத்த

மஹிந்த அளவுக்கு நாட்டுக்கு சேவையாற்றிய தலைவர் எவருமில்லை – லொஹான் ரத்வத்த

மஹிந்த ராஜபக்ஷ அளவுக்கு இந்த நாட்டுக்கு சேவையாற்றிய தலைவர் வேறு யாரும் இல்லை எனவும் எனவே அவர் இனி அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை எனவும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

நேற்று (22) ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ ஓய்வுபெறும் காலம் வந்துள்ளதாகவும், அவர் இன்னும் இந்த நாட்டில் மிகவும் பிரபலமான அரசியல்வாதி எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு இல்லை.

மக்கள் விரும்பும் போது தேர்தல் நடத்தப்படுமே தவிர, போராட்டக்காரர்கள் விரும்பும் போது தேர்தல் நடத்தப்படாது.

மக்கள் அதனை நிராகரிக்கும் போது அரசியலில் இருந்து விலகத் தயார் எனவும் இல்லையேல் போராட்டக்காரர்களுக்கு பயந்து அரசியலை கைவிடத் தயாராக இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles