மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் பெட் ஸ்கேன் இயந்திரம் சுமார் ஒரு மாத காலமாக முடங்கியுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால், PET ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள் பலர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
PET ஸ்கேன் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படும் நோயாளர்களுக்கு வழங்கப்படும் FDG இன்மையே இதற்குக் காரணம் எனவும், தனியார் துறையில் இவ்வாறான பரிசோதனையை மேற்கொள்வதற்கு சுமார் 3 இலட்சம் ரூபா செலவாகும் எனவும் அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.