அத்தியாவசிய ஔடதங்களை தடையின்றி இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சு பூரண ஆதரவை வழங்கும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சில் நேற்று விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அதிகாரிகளுடன், இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுகாதார அமைச்சின் செலவுகளை ஈடுசெய்வது தொடர்பான, விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.