பாதுகாப்பு காரணங்களினால் புதிய களனி பாலத்தினை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
மேலும், இந்த பகுதியில் பொலிஸ், இராணுவ ரோந்து மற்றும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை அமைப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
களனி புதிய பாலத்தின் கீழ் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் பதுங்கியிருப்பதாகவும், பாலத்தின் ஆணிகள், மின்சார வயர்கள், செப்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை அகற்றும் பணியில் தொடர்ந்தும் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் புதிய களனி பாலம் அபாயகரமாக மாறக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையில் அண்மையில் கூடிய தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு கூடிய போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.