கொழும்பில் துரித கதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரத்துக்கு நீர்வழங்கலின் போது முழுமையாக டிஜிட்டல் முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச முதலீடுகள் மற்றும் நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உட்பட பலர் கலந்து கொண்டனர்.