Thursday, August 7, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் உள்ள தந்தையை பார்க்க சைக்கிளில் சென்ற சிறுவன்

கொழும்பில் உள்ள தந்தையை பார்க்க சைக்கிளில் சென்ற சிறுவன்

கொழும்பில் பணியாற்றும் தனது தந்தையை பார்ப்பதற்கு சைக்கிளில் செல்ல முயன்ற சிறுவனை மீட்ட கல்முனை தலைமையக பொலிஸார் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் 10 வயதுடைய சிறுவன் தனது தாயாருக்கு தெரியாமல் வீட்டை விட்டு அதிகாலை வேளை சென்றுள்ளார்.

குறித்த சிறுவன் துவிச்சக்கரவண்டி ஒன்றை பெற்று அக்கரைப்பற்று நகருக்கு சென்று பின்னர் பேருந்தில் கல்முனை பகுதிக்கு சென்று தனியாக நடமாடி திரிந்துள்ளார்.

இவ்வாறு தனியாக ஒரு சிறுவன் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதை அவதானித்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதன் போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழு அச்சிறுவனை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அச்சிறுவன் தனது தந்தை கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதாகவும் அவரை பார்ப்பதற்கு சைக்கிளில் அங்கு செல்வதற்கு தயாரானதாக குறிப்பிட்டார்.

உடனடியாக குறித்த சிறுவனிடம் தகவல்களை பெற்ற பொலிஸார், சிறுவனின் தாயாரை அழைத்து சிறுவனை ஒப்படைத்துள்ளதுடன் அவருக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles