Friday, August 1, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்து செய்ய யோசனை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்து செய்ய யோசனை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்யும் யோசனை தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பான யோசனைகளை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான யோசனை நாடாளுமன்ற தெரிவுக் குழுக்களினூடாக முன்வைக்கப்பட்டவுள்ளது.

நாடாளுமன்ற விசேட கட்டளைகள் சட்டமூலத்தின் ஊடாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்ய முடியும்.

தமது பணிளை முன்னெடுத்து செல்வதில் வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles