வட மாகாணத்தில் மாணவர்கள் இன்மையினால் சுமார் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியா – கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.