கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கு இடையிலான வடக்கு ரயில் பாதையில் சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்குவதற்கு இந்திய அரசாங்கம் 4,500 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான தொகையை (15 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்திய அரசாங்கம் இந்த ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.
வடக்கு ரயில் பாதையின் நவீனமயமாக்கல் நிறைவடைந்தவுடன் கொழும்பு மற்றும் KKS க்கு இடையிலான பயண நேரம் ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அநுராதபுரம் முதல் மாஹோ வரையிலான ரயில் பாதை புனரமைக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இத்திட்டம் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது